நிலங்களின் வகைகள் நன்செய் நிலம்: தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர்ப்பாய்ச்சல் ஆதாரம் மிகுந்த நிலப் பகுதிகள், மண்ணின் தரம் மற்றும் வயனம் மேம்பட்டதுமான விவசாய நிலம் நன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. ஆற்றுநீர், தேக்கி வைக்கப்பட்ட குளத்து நீர், நன்செய நிலங்களில் உள்ள கிணற்று நீர் ஆகிய நீர்வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத்தொகுதி நன்செய் எனப்படுகிறது. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக நெல்,கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. புன்செய் நிலம்: தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் புன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாகத் தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான புன்செய் நிலங்கள் கிணறுகள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு சோளம், கருஞ்சோளம், அ...
பயிராய்வு (Azmoish) பயிராய்வு மேற்கொள்ள கணக்கு எண் 2 (அடங்கல்) அடிப்படையானது. இக்கணக்கு கிராம நிர்வாக அலுவலரால், பொறுப்பு கிராமத்திற்கு, ஒவ்வொரு பசலி வருடத்திற்கும் கைப்பற்று நிலத்தையும். சாகுபடி நிலத்தையும் புலவாரியாகக் காட்டுவதற்கு தயாரிக்கப்படுவதாகும். பசலி துவக்கத்திலேயே எழுதப்பட வேண்டும். இதன் பக்கங்கள் எண்ணிடப்பட்டு வருவாய் ஆய்வாளர் சான்றுடன் வட்டாட்சியர் முத்திரை பெறப்பட்டிருப்பதை வருவாய் ஆய்வாளர் கண்காணிக்க வேண்டும். வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரால் பயிர் மேலாய்வு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலரால் அடங்கல் பதிவுகள் கீழ்க்கண்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை, தணிக்கை செய்து உறுதி செய்யப்பட வேண்டும். பசலி துவக்கத்திலேயே எழுதி சரிபார்த்து சான்று பெறப்பட்டுள்ளதா? 1) 1 முதல் 6 முடிய உள்ள கலங்கள் முந்தைய பசலி அடங்கல் "அ" பதிவேடு. 2) சிட்டா. குத்தகை, உரிமைப்பதிவேடு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதா? 3) வகைப்பாடு வாரியாகவும், நீர்ப்பாசன வாரியாகவும் எழுதப்பட்டுள்ளதா? 4) குத்தகை உரிமை விவரம் ஆம் - இல்லை என பதிவு செய்யப்பட்டுள்ளதா? 5)...