பட்டா என்பது தற்போது கணிணி 10 (1) சிட்டா நகலே பட்டா ஆகும்.
பட்டா மாறுதல் (PATTA TRANSFER)
இது குறித்து வருவாய் நிலைய ஆணை எண். 31 ல் விளக்கப்பட்டுள்ளது.
I) மூவகை மாறுதல்கள்
1. உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றுதல்
2. நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க அல்லது வருவாய்த்துறை ஏலத்திற்கிணங்க மாறுதல்.
3. வாரிசு (வழியுரிமை) முறையில் உரிமை மாற்றுதல்
முதல் வகை உரிமை மாற்றம் குறித்து பின்கண்ட பத்தி VI ல் விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வகை உரிமை மாற்றத்தை பொறுத்து சொத்துக்களை ஏலம் விட்டதற்கான நீதிமன்ற தீர்ப்பு படி வழங்கப்படும். நீதிமன்றம் ஏலச் சான்று மற்றும் ஏலம் எடுத்தவர் சொத்தினை சுவாதீனம் எடுத்துக் கொண்டதற்கு பெறப்படும் சுவாதீன ரசீது அடிப்படையில் பட்டாமாறுதல் மேற்கொள்ளப்படும் அதே போன்று வருவாய்த்துறையில் (RR Act) ஏபதி நடவடிக்கையின் மூலம் நிலத்தை ஏலத்தில் எடுத்தவர் பெயரில் வழங்கப்படும் விற்பனை சான்று புத்திரத்தின் அடிப்படையில் உரிமைமாற்றம் செய்யப்படும். மூன்றாவது வகை உரிமை மாற்றம் குறித்து பின்வரும் பத்தி II ல் விவரிக்கப்பட்டுள்ளன.
II) வாரிசு முறையில் வரப்பெறும் வழியுரிமை:
வாரிசு முறையில் வழியுரிமை வரப்பெறுவதில் விவகாரம் ஒன்றும் இல்லாவிடில் பதிவு மாறுதல் செய்து ஆணை பிறப்பிக்கலாம். ஆட்சேபனை இருந்தால் இது குறித்து விசாரணை மேற்கொண்டு ஓர் அறிவிப்பு வெளியிடவேண்டும். வழியுரிமை உடையவர் பெயரில் பதிவு மாற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பவர் எவராயினும் அந்த அறிவிப்பு தேதியில் இருந்து மூன்று மாதத்திற்குள் தனது உரிமையை நிலைநாட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக உறுதிமொழி கூறி மேற்படி பிராது நகலை தாக்கல் செய்தால் அன்றி அத்தகைய வழியுரிமை உடையவர் பெயரில் பதிவு மாற்றம் செய்யப்படும் என்று மேற்படி அறிவிப்பில் தெரிவித்து அதனை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பவேண்டும். அத்தகைய உறுதிமொழி தாக்கல் செய்யப்படாவிட்டால் அறிவிப்பில் தெரிவித்த மூன்று மாதங்கள் கழிந்த உடன் பதிவு செய்யவேண்டும். உறுதிமொழி தாக்கல் செய்யப்பட்டால் மேல் நடவடிக்கை எடுக்கும் முன் வழக்கின் முடிவை எதிர்ப்பார்க்கவேண்டும்
பாகப்பிரிவினை ஆகாத குடும்பங்களின் வாரிசுகளின் பெயர்களைப் பதிவு செய்வதில் திரச்சவை குடும்பத்தை நிர்வாகம் செய்பவர் பெயரில் பதிவு செய்ய வேண்டும். மற்றவற்றில் சொத்தில் உள்ள உலகில வரிகளின் பெயர்களும் உத்தரவை சிக்கப்பட்டு பட்டா மாறுதல் செய்யப்படும். சம்பாதித்தவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் வாரிசுகள் அனைவருக்கும் சமமாக சொத்து பிரிக்கப்பட்டு பட்டா மாறுதல் செய்யப்படும்.
III. பவுத்தி பட்டா மாறுதல்:
வ.வா.நீ. ஆ. எண். 31- 5 (II) மற்றும் 8-ன்படி புல உட்பிரிவுகளுக்கு உட்படாத இனங்கள் மற்றும் பிரச்சனைக்குரியவை இல்லாத இனங்களில் பட்டாதாரர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பட்டா மாறுதல் செய்யும் (பவுத்தி பட்டா மாறுதல்) நடைமுறை தற்போது இல்லை. பட்டா வழங்குதல் கணிணி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் (அல்லது) துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்திரவு பிறப்பிக்கப்படும் (CLA Lr. K4/ 368/2013 Dated 05-02-2013)
IV) காணாமல் போனவர் நிலம் :
RSO 31-6 (II) ன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று மெய்பிக்கப்படும் நிலையில் அவரது வாரிசுதாரர் அல்லது அனுபவதாரர் பெயரில் உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பதிவு மாறுதல் យប់ (CLA. Lr. K4/369/2013 Dated 05-02-2013)
V) 12 ஆண்டுகளாக சுவாதீனம் மெய்ப்பிக்கின்றவர் நீலம் :
1 RSO 31-7 ன்படி 12 ஆண்டுகளாக நிலத்தின் சுவாதீனம் மெய்ப்பிக்கின்றவர் பெயரில்உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பதிவு மாறுதல் செய்யப்படும். (CLA. Lr. K4/369/2013 Dated 05-02-2013)
VI) பட்டா மாறுதல் அறிவுரைகள்
1 கிரையம் பெற்றவரின் சொத்து விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருப்பின் கிரைய ஆவண அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யலாம் (CLA. Lr. K4/369/2013 Dated 05-02-2013)
2. நிலத்தை மாற்றம் செய்பவர் பெயரும் 10 (1) சிட்டாபடி பதிவு செய்யப்பட்டவர் பெயரும் வெவ்வேறாக இருந்தால் நிலத்தை வாங்குபவர் விற்பவர் முதலியோரை அலுவலகத்தில் விசாரிக்கவேண்டும். ஆவண சான்றுகள் முந்தைய விற்பனை கிரைய பத்திரங்கள் கிஸ்தி ரசீதுகள் கிராம நிர்வாக அலுவலரின் நேர்முக சாட்சியங்கள் முதலியவற்றை பரிசீலனை செய்து 10 0 சிட்டாபடி பதிவு பெற்ற நில சுவான்தாரர் மற்றும் நிலத்தை தன் பெயருக்கு பதிவு மாற்றம் கோருபவர்களுக்கிடையே உள்ள தொடர்பை கண்டறிந்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
3. பூஸ்திதி அனுபவம் மற்றும் கைப்பற்றுப்படி உற்ற விஸ்தீரனத்திற்கும் கிரைய பத்திரத்தில் கண்ட விஸ்தீரனதிற்கும் இடையே மாறுபாடுகள் இருப்பின் நிலஉடைமைதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் சம்மத வாக்குமூலம் பெற்று அவர்களின் அனுபவப்படி பட்டா மாறுதல் செய்யலாம்.
4. புதிய சர்வே எண்ணுக்குப் பதிலாக பழைய சர்வே எண் குறிப்பிடப்பட்டு இருந்த புதிய சர்வே எண் படி பட்டா மாறுதல் ஆணை பிறப்பிக்கலாம்.
5. பத்திரத்தில் கண்ட சர்வே எண்ணிற்கும் நான்கு எல்லைகளுக்கும் ஒத்திருக்கவில்லை என்றால் நான்கு எல்லையை ஒத்திட்டு சரிபார்த்து பிறகு பட்டா மாறுதல் ஆணை பிறப்பிக் வேண்டும். இதன்படி, சரிசெய்யப்பட்ட கிரைய பத்திரங்களை கால கிரமத்தில் தாக்கல் செய்யும்படி, அவர்களுக்கு அறிவுரை தருதல் வேண்டும்.
6. ரத்து செய்யப்படும் மனுக்களில் அதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் அனுப்பி அவர்கள் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை பெற்று சம்பந்தப்பட்ட கோப்பில் வைக்க வேண்டும் (நிலவரி திட்ட இயக்குனரின் கடிதம் எண் 054/16014/1985 (ปัญ)/8-02-1986).
7.கூட்டுநிலம் கொண்டோரின் பங்கு முழுமையோ அல்லது அதில் ஒரு பாகமோ மாற்றப்பட்டு தனி பதிவு வேண்டப்பட்டால் நிலத்தில் அவர் பங்குகளின் எல்லைகளுக்கும் சரியான முறையில் வரப்பு கட்டப்பட்டு இருக்குமானால் மற்ற கூட்டு பட்டாதாரர்களின் இசை இல்லாமல் கூட்டுடைமை நிலங்களை உட்பிரிவு செய்து தனியாக பதிவு செய்யலாம் (RSO 31-13 (III))
8. அனுபவத்தை பிரித்து காண்பிக்கும் வகையில் பூமியில் அத்துக்கல் இல்லை என்றாலும் பத்திரத்தில் கண்ட அளவு மற்றும் நான்கு எல்லையில் கண்ட விபரங்களின்படியும் சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதல்களின் பெயரிலும் உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் ஆனை பிறப்பிக்கவேண்டும்.
9. உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்களில் வட்டாட்சியர் ஆணையிட வேண்டும் 12 ஆண்டுகளாக சுவாதீனம் இருப்பதாக மெய்ப்பிக்கின்றவர் பெயரில் பதிவு மாற்றதலும் மேற்கண்ட 7 ஆண்டுகளுக்குப் பின் பதிவு செய்தல் முறையையே பின்பற்றி நடைபெறும்.
10. பட்டா பாஸ்புத்தகத்திற்கு மாற்று ஆவணமாக கணிணி 10 (1) சிட்டா நகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசாணை (பல்வகை) 591, வருவாய் (நீ.அ.1-1) துரை : 08-09-2006.
பட்டா மாறுதல் பதிவு விபரங்கள் :
எந்தவொரு பட்டா மாற்றம் விண்ணப்பம் வரப்பெற்றாலும் பட்டா மாறுதல் கோருபவரின் விண்ணப்பத்தில் கண்ட புல எண், பரப்பு, வகைப்பாடு சரியாக உள்ளதா? சிட்டாவின் படி பெயருள்ளதா? அவருக்கும், நிலத்திற்கும் என்ன தொடர்பு? நிலத்தை விற்றவருக்கு, விற்பனை செய்ய உரிமை /அதிகாரம் உள்ளதா? ஒரு புல எண்ணின் முழு அளவும் விற்கப்பட்டுள்ளதா, இல்லையா? நிலத்தின் உரிமை குறித்து ஏதாவது வழக்கு நடக்கிறதா? ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு இருந்தால் தீர்ப்பின் நகல் இணைக்கப்பட்டுள்ளதா? பட்டா மாறுதல் கோரும் நபருக்கு அதற்கான உரிமை உள்ளதா? சொத்தின் உரிமையை காட்ட ஆவணங்கள் உள்ளதா? என அனைத்தையும் ஆராய்ந்த பிறகே பட்டா மாறுதல் சம்பந்தமாக தன்னுடைய அறிக்கையை வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும்.
VAO க்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து அரசு ஆணை எண் 581,வருவாய்த்துறை நாள் 03.04.1987ல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் பட்டாதாரர் தன் நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்தல், தானம் செய்தல், மற்றொருவர் நிலத்துடன் தன் நிலத்தை பரிவர்த்தனை செய்தல் ஆகிய முறைகளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பெற்றவுடன் படிவம் 13 ன்படி பட்டா மாற்றத்திற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். படிவம் 13 வரப்பெற்றவுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வட்டக் கணக்கு எண் 6-1ல் பதியப்பட்டு கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கைக்காக அனுப்பப்படும். பின்னர் கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கை பெற்று மண்டல துணை வட்டாட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்படும். தற்போது பட்டா மாறுதல் அனைத்தும் online மூலமாக நடைபெற்று வருகிறது.
இவ்வுத்தரவின் விவரங்கள் கிராம கணக்கு எண் 3 பிரிவு 3ன் கலம் 8,9,10ல் பதியப்படும். கிராம கணக்கு எண் 2,(10-1) சிட்டா ஆகியவற்றிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். தனி நபர் தன் நிலத்தின் உரிமையை அரசுக்கு விட்டுவிடுதலில், உரிமை விட்டு விடுதலை ஏற்று வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தவுடன் கிராம கணக்கு எண் 3 பிரிவு 1ல் பதியப்படும். இது நிரந்தரமான மாறுதல் என்பதால் கிராம அ' பதிவேட்டின் உள்ளடக்கம், அடங்கல், சிட்டா ஆகியவற்றில் மாறுதல்கள் மேற்கொள்ளப்படும்.
உட்பிரிவுகள் செய்யப்பட்டால் "அ" பதிவேட்டிலும், புலவரைபடத்திலும் மாறுதல் மேற்கொள்ளப்படும். நிலங்களை பாகப்பிரிவினை செய்தல் மற்றும் நிலங்களை அவரவர் பங்கிற்கு ஏற்ப உட்பிரிவு செய்தல் ஆகிய முறைகளில் அவரவர் பங்குகளை உட்பிரிவு செய்வதற்கு உட்பிரிவு ஆவணங்கள் வட்டாட்சியரால் அங்கீகரிக்கப்படும்.
கிராம கணக்கு எண் 3 முறையே பிரிவு 4 மற்றும் 3ல் இவை பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படும். இவற்றால் ஏற்படும் மாற்றங்கள் கிராம கணக்குகளான அடங்கல், அ'பதிவேடு, சிட்டா, நில வரைபடம் ஆகியவற்றில் மாறுதல் மேற்கொள்ளப்படும். தனியார் நிலங்களின் தன்மையை நன்செய்யிலிருந்து புன்செய் ஆகவும், புன்செய்யை நன்செய்யாகவும் மாற்றுதலில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெறப்பட வேண்டும்.
கிராம கணக்கு எண் 10(1) சிட்டாவில் வகைப்பாடு மற்றும் தீர்வை மாறுபடும். அடங்கல், அ'பதிவேடு, அ'பதிவேட்டின் உள்ளடக்கம் ஆகியவற்றில் மாறுதல் ஏற்படும். இதன் விவரங்கள் கிராம கணக்கு எண் 3 பிரிவு 4ல் பதியப்படும்.
நீதிமன்ற தீர்ப்புகளால் நில உரிமை மாறுபடுதல் மற்றும் நீதிமன்றத்தால் நிலங்கள் விற்கப்படுதல் ஆகியவற்றில் நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக கொண்டு பட்டா மாறுதல் உத்தரவுகள் வட்டாட்சியரால் பிறப்பிக்கப்படும். கிராம கணக்கு எண் 3 ல் பிரிவு 3ல் பதிவுகள் மேற்கொண்டு அடங்கல், சிட்டாவில் மாறுதல்கள் செய்ய வேண்டும்.
Comments
Post a Comment