வருவாய்த்துறை வரலாறு: கி.மு. 320-650 காலகட்டத்தில் குப்தர்கள் ஆட்சியில் நிலவரியை பணமாக கட்டும் நடைமுறை கொண்டுவரப்பெற்றுள்ளது. பழங்கால பேரரசர்கள் மற்றும் மன்னர்கள் காலத்தில் நிலவரித் தொகை முக்கிய வருவாயாக இருந்துள்ளது. இந்த நிலங்கள் ஜாகிர்களாக பிரிக்கப்பட்டு அவை ஜகிர்தாரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதனை பிரித்து ஜாகிர்தாரர்கள் ஜமின்தாரர்களுக்கு ஒதுக்கினர். நிலவரி வசூல் செய்தல் முகலாய மன்னர்கள் ஆட்சிக்கு முன்னதாக, வட இந்திய துருக்கில் சுல்தான் மன்னர்கள் மற்றும் தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அனைவரும் இந்து அரசர்கள் கடைபிடித்த நிலவரி முறையே பின்பற்றியுள்ளார்கள். சூரிய வம்ச மன்னர் ஷெர்ஷா சூரி என்பவர் (கி.பி. 1538 முதல் 1545 முடிய) நிலவரிக்காக புதிய நில அளவை மற்றும் நில வகைப்பாட்டு முறையை கொண்டு வந்து ரூபாய் முறையை அறிமுகப்படுத்தினார். முகலாய மன்னர் அக்பர் (கி.பி. 1556 முதல் 1605 வரை) என்பவர் தோடாமால் என்ற நிதிஅமைச்சர் உதவியால் மன்னர் ஷெர்ஷா சூரி கொண்டு வந்த நில வருவாய் நிர்வாகத்தை மேம்படுத்தினார். கி.பி. 1632-ல் பிரிட்டிஷாரால் வணிகர்களாக கட்டாக் நகருக்கு வந்துள்ளார்கள். மேலும், கிழக்...
Free Mock Test and Newz