Skip to main content

வருவாய்த்துறை வரலாறும் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விபரமும்



வருவாய்த்துறை வரலாறு:

கி.மு. 320-650 காலகட்டத்தில் குப்தர்கள் ஆட்சியில் நிலவரியை பணமாக கட்டும் நடைமுறை கொண்டுவரப்பெற்றுள்ளது. பழங்கால பேரரசர்கள் மற்றும் மன்னர்கள் காலத்தில் நிலவரித் தொகை முக்கிய வருவாயாக இருந்துள்ளது. இந்த நிலங்கள் ஜாகிர்களாக பிரிக்கப்பட்டு அவை ஜகிர்தாரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதனை பிரித்து ஜாகிர்தாரர்கள் ஜமின்தாரர்களுக்கு ஒதுக்கினர். நிலவரி வசூல் செய்தல் முகலாய மன்னர்கள் ஆட்சிக்கு முன்னதாக, வட இந்திய துருக்கில் சுல்தான் மன்னர்கள் மற்றும் தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அனைவரும் இந்து அரசர்கள் கடைபிடித்த நிலவரி முறையே பின்பற்றியுள்ளார்கள். சூரிய வம்ச மன்னர் ஷெர்ஷா சூரி என்பவர் (கி.பி. 1538 முதல் 1545 முடிய) நிலவரிக்காக புதிய நில அளவை மற்றும் நில வகைப்பாட்டு முறையை கொண்டு வந்து ரூபாய் முறையை அறிமுகப்படுத்தினார்.

முகலாய மன்னர் அக்பர் (கி.பி. 1556 முதல் 1605 வரை) என்பவர் தோடாமால் என்ற நிதிஅமைச்சர் உதவியால் மன்னர் ஷெர்ஷா சூரி கொண்டு வந்த நில வருவாய் நிர்வாகத்தை மேம்படுத்தினார். கி.பி. 1632-ல் பிரிட்டிஷாரால் வணிகர்களாக கட்டாக் நகருக்கு வந்துள்ளார்கள். மேலும், கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் கி.பி. 1698 ல் முகலாய மன்னர்களிடமிருந்து ஜமின்தார் உரிமையை பெற்றுள்ளனர். மேலும் 1757-ம் ஆண்டில் நடைபெற்ற பிளாசிப்போர் மற்றும் 1764 ஆண்டில் நடைபெற்ற பள்க்ஸர் போர் ஆகியவற்றில் பெற்ற வெற்றிகளை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் காலூன்றியது.

கி.பி. 1772 ஆம் ஆண்டில் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்வர் கவர்னர் ஜெனரலாக பணியாற்றிய போது கிழக்கிந்திய கம்பெனி இயக்குநர்களின் ஆணையின் பேரில் "வருவாய் வாரியம்" (Board of Revenue) அமைத்து கலெக்டர்கள் (Collectors) நியமனம் செய்யப்பட்டார்கள்.

கி.பி. 1786 ஆம் ஆண்டில் லார்டு காரன்வாலிஸ் என்பவர் கவர்னர் ஜெனரலாக பணியேற்ற பிறகு 1789 ஆம் ஆண்டில் ஜமின்தாரர்களுடன் பத்தாண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

கி.பி. 1786 ஆம் ஆண்டில் லார்டு காரன்வாலிஸ் என்பவர் கவர்னர் ஜெனரலாக பணியேற்ற பிறகு 1789 ஆம் ஆண்டில் ஜமின்தாரர்களுடன் பத்தாண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

கி.பி. 1793 ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை சட்டத்தின்படி கொண்டு வரப்பட்ட நிலையான நிலவரித்திட்டம் (Permanent Land Revenue Regulation Act) பத்தாண்டு ஒப்பந்தங்கள் நிலையாக மாற்றப்பட்டன.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 3 வகையான நிலவரி வசூல்முறைகள் இருந்தன.

1. ஜமின்தாரி முறை (Zamindari Method)

2. ரயத்துவாரி முறை (Ryotwari Method)

3. மகசூல்வாரி முறை (Mahalwari Method)

1803 ஆம் ஆண்டிற்கு முன்னர்:

இங்கிலாந்து நாட்டின் குயின் எலிசபெத் - 1 என்ற அரசி காலத்தில் ஒரு சாசனம் மூலமாக கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்த கம்பெனி கி.பி. 1773ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒழுங்குமுறை சட்டத்தின்படி பெங்கால், பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களில் நிர்வாகம் செய்தனர். மேலும், வருவாய் நிர்வாக அதிகாரங்களை கவர்னர் ஜெனரல் பெற்றார். பின்னர் வருவாய் நிர்வாக பணிகளை நிர்வகிக்க வாரியம் அமைக்கப்பட்டது. இதற்காக 20-06-1789 அன்று பிரிட்டிஷ் அரசு சென்னை மாகாணத்தில் வருவாய் வாரியம் (Board of Revenue) ஒன்றை நிறுவியது. இதில் முதலில் புலத்தில் நில அளவை மற்றும் நிலவரித் திட்டப்பணி மற்றும் நிலப் பதவுருக்கள் பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 1916 ஆம் ஆண்டில் வேளாண்மை கால்நடை மற்றும் கூட்டுறவு துறைகள் நிறுவப்பட்டன. பின்னர் வருமான வரி, ஆயத்துறை, கடல், சுங்கம் மற்றும் உப்பு துறைகள் அமைக்கப்பட்டன. இதன் பின்னர் வாரிய நிலை ஆணைகள் (Board Standing Orders) வகுக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் சமூக நலம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைக்கப்பட்டன.

மேலும் கடந்த 05-12-1980 அன்று வருவாய் வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, வருவாய் நிர்வாகம், நில நிர்வாகம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம் ஆகிய 3 துறைகள் நிறுவப்பட்டன.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

வருவாய்த்துறை மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. அனைத்து நிர்வாகத் துறைகளுக்கும் தாய்த்துறையாக வருவாய்த்துறை கருதப்படுகிறது. இத்துறை குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் இரண்டற கலந்து பயனளிக்கிறது. சீரான சமூக வளர்ச்சிக்கு இத்துறையின் பங்கு அளவிடற்கரியது. சாமானிய மனிதனின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் வருவாய்த்துறையின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.


மாநிலத்தில் உள்ள நிர்வாக அமைப்புகளில் வருவாய்த்துறை மிகவும் பழமையானதும் பெருமைக்குரியதும் ஆகும். வருவாய்த்துறை கிராமத்திலும், மாவட்டத்திலும், மாநிலத்திலும் முழுமையான கட்டமைப்பினை கொண்டுள்ளதால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடிகிறது.

இத்துறை சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. வருவாய்த் துறையின் நிர்வாக நடுவர்கள் மூலம் குவுச நடைமுறைகளைப் பின்பற்றி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்படுகிறது. இத்துறை அரசின் உடமைகளான நிலம்,நீர்நிலை,கனிமம் மற்றும் புதையல் ஆகியவற்றிற்கு பாதுகாவலனாக இருந்து வருகிறது.விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அரசின் உதவித் தொகையை பெறுவதற்கும். தொழில் முனைவோர் மற்றும் பொது/தினாயார் தொழில்சாலைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு உரிமங்கள் ஆகியவற்றை இத்துறை வழங்கி வருகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் இந்திய மற்றும் மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ள அமைப்புகளுக்கான தேர்தல்களிலும் வருவாய்த்துறை மிக முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், வருவாய்த்துறை இயற்கை இடர்ப்பாடுகளின் போதும், மனிதர்களால் ஏற்படும் பேரிடர்களின் போதும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கேற்ப முன்னின்று செயல்பட்டு வருகிறது. வறட்சி, வெள்ளம், புயல், சுனாமி, தீ விபத்துகள் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை எளிதில் சென்றடைவதிலும் மற்றும் நெருங்க முடியாத இடங்களில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மற்றும் உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் முதன்மையான துறையாக செயல்பட்டு வருகிறது.

வருவாய்த்துறை தற்பொழுது மிகவும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு அன்றாடம் அத்தியாவசியமாக தேவைப்படும் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் எளிய மக்களுக்குத் தேவையான சமூக பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

வருவாய்த் துறை தேர்வுகளின் Book Meterial தொகுப்பு PDF FILES

வருவாய்த் துறை தேர்வுகளின் Book Meterial தொகுப்பு PDF FILES லிங்க்: Revenue Test Part I (Meterial- 1)                                       (Meterial -2) Revenue Test Part II (Meterial -1) ,                                          (Meterial 2) Revenue Test Part III District Office Manual (DOM) Revenue Standing Order - 1 Revenue Standing Order -2 Revenue Standing Order -3 Revenue Standing Order - 4 The Tamil Nadu Account Code Volume 1 The Tamil Nadu Account Code Volume 2 The Tamil Nadu Treasury Code Volume 1 The Tamil Nadu Budget Manual Volume 1 THE CODE OF CRIMINAL PROCEDURE, 1973 THE CODE OF CRIMINAL PROCEDURE, NEW INDIAN PENAL CODE PART I INDIAN PENAL CODE PART II INDIAN PENAL CODE PART III INDIAN PENAL CODE PART IV INDIAN EVIDENCE ACT PART 1 INDIAN EVIDENCE ACT PART II INDIAN EVIDE...

Easy office work Excel USEFUL FORMULA IN Tamil Details

  MOST USEFUL FORMULA IN EXCEL VLOOKUP FORMULA முதல் Row-வில் உள்ள Data-களை இரண்டாவது Row-வில் உள்ள Data.களுடன் ஒப்பிட்டு பார்க்க  VLOOKUP FORMULA  பயன்படுகிறது =VLOOKUP(B3,D:D,1,FALSE) CONCATENATE  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இணைப்பதற்கு  CONCATENATE  FORMULA பயன்படுகிறது. =CONCATENATE(B3," ",C3," ",D3) CHAR(1)  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இடைவெளி விட்டு இணைப்பதற்கு  CHAR(1)  FORMULA   பயன்படுகிறது. =B3&CHAR(1)&C3&CHAR(1)&D3 CHAR(10)  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒரே செல்லில் மேலிருந்து கீழ் வரிசையில்  CHAR(10)  FORMULA  வைப்பதற்கு  =B3&CHAR(10)&C3&CHAR(10)&D3 TRIM FORMULA ஒரே செல்லில் உள்ள நிறைய இடைவெளி (space) -னை சரி செய்ய  TRIM FORMULA பயன்படுகிறது =TRIM(D3) LOWER FORMULA ஒரு செல்லில் உள்ள ஆங்கில பெரிய எழுத்தை சிறிய எழுத்தாக மாற்றுவதற்கு  LOWER FORMULA பயன்ப...

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற (06.05.2024) திங்கள் கிழமையன்று உள்ளுர் விடுமுறை. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை வேலைநாளாகும். இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.