நிலங்களின் வகைகள் நன்செய் நிலம்: தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர்ப்பாய்ச்சல் ஆதாரம் மிகுந்த நிலப் பகுதிகள், மண்ணின் தரம் மற்றும் வயனம் மேம்பட்டதுமான விவசாய நிலம் நன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. ஆற்றுநீர், தேக்கி வைக்கப்பட்ட குளத்து நீர், நன்செய நிலங்களில் உள்ள கிணற்று நீர் ஆகிய நீர்வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத்தொகுதி நன்செய் எனப்படுகிறது. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக நெல்,கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. புன்செய் நிலம்: தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர் பாய்ச்சல் ஆதாரம் இல்லாத நிலப் பகுதிகள் புன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாகத் தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான புன்செய் நிலங்கள் கிணறுகள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, வரகு, தினை, வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு சோளம், கருஞ்சோளம், அ...
Free Mock Test and Newz