Skip to main content

வருவாய்த்துறையின் முக்கிய பணிகளான பயிராய்வு (Azmoish)



பயிராய்வு (Azmoish)

பயிராய்வு மேற்கொள்ள கணக்கு எண் 2 (அடங்கல்) அடிப்படையானது. இக்கணக்கு கிராம நிர்வாக அலுவலரால், பொறுப்பு கிராமத்திற்கு, ஒவ்வொரு பசலி வருடத்திற்கும் கைப்பற்று நிலத்தையும். சாகுபடி நிலத்தையும் புலவாரியாகக் காட்டுவதற்கு தயாரிக்கப்படுவதாகும். பசலி துவக்கத்திலேயே எழுதப்பட வேண்டும். இதன் பக்கங்கள் எண்ணிடப்பட்டு வருவாய் ஆய்வாளர் சான்றுடன் வட்டாட்சியர் முத்திரை பெறப்பட்டிருப்பதை வருவாய் ஆய்வாளர் கண்காணிக்க வேண்டும்.

வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரால் பயிர் மேலாய்வு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலரால் அடங்கல் பதிவுகள் கீழ்க்கண்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை, தணிக்கை செய்து உறுதி செய்யப்பட வேண்டும்.

பசலி துவக்கத்திலேயே எழுதி சரிபார்த்து சான்று பெறப்பட்டுள்ளதா?

1) 1 முதல் 6 முடிய உள்ள கலங்கள் முந்தைய பசலி அடங்கல் "அ" பதிவேடு.

2) சிட்டா. குத்தகை, உரிமைப்பதிவேடு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதா?

3) வகைப்பாடு வாரியாகவும், நீர்ப்பாசன வாரியாகவும் எழுதப்பட்டுள்ளதா?

4) குத்தகை உரிமை விவரம் ஆம் - இல்லை என பதிவு செய்யப்பட்டுள்ளதா?

5) பட்டா மாற்றும் குறித்த பதிவுகள் உரிய பட்டா மாறுதல் ஆணைப்படி உரிய பதிவுகள் செய்து வருவாய் ஆய்வாளர் கருக்கொப்பம் பெறப்பட்டுள்ளதா?

6) சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர், நெல் சாகுபடியாக இருப்பின், அதன் வகை ஐ.ஆர். 20. டி.கே. எண்9 என குறிக்கப்பட்டுள்ளதா?

7) சாகுபடியான மாதம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா?

8) சாகுபடி பரப்பு சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா ? புல உட்பிரிவில் பகுதி சாதப்டி செய்யப்பட்டிருப்பின் அதன் பரப்பு அளந்து எழுதப்பட்டுள்ளதா ? தரிசாகவோ நாற்றங்களாகவோ, பம்பு செட் கட்டிடம் என விடப்பட்டிருப்பின், அதன் விபரம் அளவுகளுடன் கலம் 18-ல் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

9) பல்வேறு வகுப்புடைய நிலங்களில் புல எண் வாரியாக அதன் மொத்த விஸ்தீரணத்தில் சாகுபடி நீங்கலாக தரிசாக விடப்பட்டுள்ளது. அல்லது வேறு பயன்பாடாக உள்ளது. 'அ' முதல் 'ஏ' முடிய எட்டு வகைப்பாடுகளில் எந்த வகைப்பாடு சார்ந்தது என்பதற்கு அதற்குரிய குறியீட்டை கலம் 18(அ) -ல் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

10) உண்மையான பாய்ச்சல் ஆதாரம் எது என்பதற்கு ஆறு, வாய்க்கால் முதலானவற்றில் நேரிடையான பாய்ச்சலாயிருப்பின், "பாய்ச்சல்" என்றும், இறவை மூலமாக இருப்பின் "இறவை" என்றும், கசிவு மூலமாக இருப்பின் "கசிவு" என்றும், சொந்தக்கிணறு மூலமாக இருப்பின் "சொந்தக்கிணறு" என்றும், மானாவாரி சாகுபடியாயிருப்பின் 'மானாவாரி" என்றும் கலம் 11ல் குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்க வேண்டும்.

11) அறுவடை மாதம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா?

12) கலம் 12-ல் விளைச்சல் அளவு (விழுக்காடு) குறிப்பிடப்பட்டுள்ளதா? (உ-ம்) 60%, 70%.

13) உணவுப் பயிர்களாயிருப்பின் பயிர் மேலாய்வு செய்யும்போது-இளம்பயிர்- தண்டு சிறியது, பால் அன்னம் முற்றியுள்ளது, அறுவடைக்கு தயார். உத்தேச மகசூல் மதிப்பு, விழுக்காடு போன்றவற்றை பயிராய்வு செய்யும் அலுவலர் கலம் 19-ல் (ஆய்வுக்குறிப்பில்] குறிப்பிடவேண்டும்.

14) பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி இனங்கள் கடந்த பசலியில் இருந்து நடப்பு பசலியில் கொண்டுவரப்பட்டுள்ளதா ? பசலி கம்மி, தீர்வை கம்மி இருப்பின் கிராம நிர்வாக அலுவலர் குறிப்புரையில் காண்பிக்கப்பட்டுள்ளதா?

15) நில அளவை புத்தகத்தில் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டிருக்கும் கண்ணி, கால்பாதை அழிக்கப்படாமல் உள்ளதா ? அழிக்கப்பட்டிருப்பின், அதனை மீண்டும் நிலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

16) புறம்போக்கு நிலங்களைப் பொறுத்து அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. (களம், சுடுகாடு, கால்பாதை, ஆறு, வாய்க்கால், குளம்) என அடங்கலில் குறிப்பிட்டிருக்கவேண்டும்.

17) புறம்போக்குகளில் ஆக்ரமணம் உள்ளதா ? ஆக்ரமணம் இருப்பின், ஆக்ரமணப்பட்டி கொடுக்கப்பட்டுள்ளதா ? ஆக்ரமண விபரம், ஆக்ரமணதாரர் பெயர். ஆக்ரமணத்தின் தன்மை, விஸ்தீரணம், நூதனம் அல்லது பழையது ஆட்சேபனைக்குரியதா ? இல்லையா ? கால அளவு முதலியன சோதனையின் போது விசாரணை மேற்கொண்டு ஆய்வுக் குறிப்பு எழுதப்பட வேண்டும்.

18) அரசு புறம்போக்கு நிலங்களில் 2-சி மரப்பட்டா வழங்கப்பட்டிருப்பின், காய்ப்பு இளசு. எண்ணிக்கையுடன் குறிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து மேலொப்பம் செய்யப்பட வேண்டும். 2-சி பெறாத மரங்கள் இருப்பின். 2-சி கணக்கில் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை அரசுக்கு வருவாய் இழப்பை தவிர்க்கும் மரவரி விதிக்கப்படாமல் உள்ள மரங்களும் அடங்கலில் பதியப்பட்டிருக்க வேண்டும். பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கப்படாத புறம்போக்கில் உள்ள மரங்களின் பலன்களை ஏலத்தில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

19) செட்டில்மெண்டின் போது இறவை வஜா அளிக்கப்பட்ட நிலங்கள் இருக்கும். அவ்வாறு வஜா அளிக்கப்பட்ட நிலங்கள் தொடர்ந்து இறவை மூலம் பாசனம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட வேண்டும். நேரிடையாக பாசனம் பெறும் பட்சத்தில், வஜா நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

20) ஆக்ரமண இனங்களில், ஆக்ரமணம் ஏதும் நடப்பு பசலியில் காலி செய்யப் பட்டிருப்பின் காலியான விபரம் மற்றும் முந்தைய பசலி ஆக்ரமணம் நடப்பு பசலியில் இல்லாது இருப்பின், ஆக்ரமணம் "கம்மி" என சிவப்பு மையினால் குறிப்பிடப்பட்டு காண்பிக்கப்பட வேண்டும்.

21) கிராம நிர்வாக அலுவலர்கள் பயிராய்வு மேற்கொண்டு கிராமக் கணக்கு எண். 1. 1-ஏ வருவாய் ஆய்வாளர் ஒப்புதலுடன் வட்ட அலுவலகத்திற்கு பிரதி மாதம் 25ம் தேதி அனுப்பியுள்ளனரா?

22) பிரதி மாதம் பயிராய்வு செய்யவில்லையெனில், சாகுபடி செய்யப்பட்ட பயிர் மற்றும் மாதம் அடங்கலில் பதிய விடுபட்டு அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பாகும்.

உதாரணமாக, திட்ட ஒருபோக நன்செய்யில் அரசாங்க பாசன ஆதாரம் மூலமாக இருபோக நன்செய் சாகுபடி மேற்கொள்ளும்போது பசலி ஜாஸ்தி விதிக்கப்பட வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட விபரம் மற்றும் மாத விபரம் அதே மாதத்தில் பதிய விடப்பட்டால், பசலி ஜாஸ்தி விதிக்காமல் விட நேரிடும். புன்செய்யில் அரசாங்க நீர்ப்பாசன ஆதாரம் மூலம் பயிர் செய்யப்படும் பயிருக்கு முதல் போகமாக இருந்தாலும் இரண்டாம் போகமாக இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தீர்வை ஜாஸ்தி விதிக்கப்பட வேண்டும். அந்தந்த மாதத்தில் புன்செய்யில் பயிராய்வு செய்து சாகுபடி பதியாமல் விடப்பட்டால் தீர்வை ஜாஸ்தி விதிக்காமல் வருவாய் இழப்பு ஏற்பட நேரிடும். ஒவ்வொரு பசலியிலும் தீர்வை ஜாஸ்தி, கம்மி, பசலி ஜாஸ்தி. கம்மி விவரம் தொடர்புடைய புல எண்ணுக்கு எதிரில் கிராம நிர்வாக அலுவலர் குறிப்பு எழுதப்பட வேண்டும்.

23) பசலி முடிவில், அடங்கலில் சுருக்கம் (கோஷ்பாரா) எழுதப்பட வேண்டும். வகைப்பாடு வாரியாகவும், நீர்ப்பாசன ஆதாரம் வாரியாகவும், கைப்பற்று -புறம்போக்கு நிலங்களுக்கு என தனித்தனியாக காண்பிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் திட்ட விஸ்திணம், தீர்வை. முதல் போகம் இரண்டு போகம் மூன்றாம் போகம் சாகுபடி விஸ்தீர்ணம் தரிக் சாகுபடியானதில் நீர்ப்பாய்ச்சப்பட்டது. நீர்ப்பாய்ச்சப்படாதது மானாவாரி என்றும், தீர்ப்பாய்ச்சப்பட்ட பரப்பில், பாய்ச்சல் க இறவை சொந்த சிறு என்றும் பிரித்து காண்பிக்கப்பட வேண்டும். இறுதியாக திப்பப்பரப்புடன் மேற்காணும் விவரங்கள் ஒப்பிட்டு சரி பார்க்கப்பட வேண்டும்.

பயிர் ஆய்வின் போது கீழ்கண்ட இனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

குறுகிய மற்றும் நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள்

2. நில மாற்றம். நில உரிமை மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்

3. நில ஒப்படைப்பின் கீழ் ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலங்கள்

4. ஆதி திராவிடர்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலங்கள்

5. வீட்டுமனை ஒப்படைப்பு செய்யப்பட்டவை.

மேற்காணும் இனங்களில் நிபந்தனை மீறப்பட்டுள்ளதா என கண்டறியப்பட வேண்டும். கிராமத்தின் போதிய நீர் இருப்பு பற்றிய விபரம், கிராமக் கணக்கு எண். 20 (மழையளவு கணக்கு ஐக் கொண்டு அறியப்பட வேண்டும். சாகுபடி நிலங்கள், அவற்றிற்கென நிர்ணயிக்கப்பட்ட பாசன ஆதாரங்கள் மூலம் அல்லது முறையற்ற வகையில் சாகுபடிக்கு நீர் எடுத்து பயிர் செய்யப்பட்டால் அந்த சாகுபடி பரப்பிற்கு சாதாரண தண்ணீர் தீர்வையுடன். கூடுதலாக அப்ராத தண்ணீ தீர்வையும் விதிக்கப்படும். அவ்வாறான முறையற்ற பாசனம் உள்ளதா என்பதை பயிராய்வின் போது கண்டறியப்பட வேண்டும் (வருவாய் நிலை ஆணை 4)


Comments

Popular posts from this blog

வருவாய்த் துறை தேர்வுகளின் Book Meterial தொகுப்பு PDF FILES

வருவாய்த் துறை தேர்வுகளின் Book Meterial தொகுப்பு PDF FILES லிங்க்: Revenue Test Part I (Meterial- 1)                                       (Meterial -2) Revenue Test Part II (Meterial -1) ,                                          (Meterial 2) Revenue Test Part III District Office Manual (DOM) Revenue Standing Order - 1 Revenue Standing Order -2 Revenue Standing Order -3 Revenue Standing Order - 4 The Tamil Nadu Account Code Volume 1 The Tamil Nadu Account Code Volume 2 The Tamil Nadu Treasury Code Volume 1 The Tamil Nadu Budget Manual Volume 1 THE CODE OF CRIMINAL PROCEDURE, 1973 THE CODE OF CRIMINAL PROCEDURE, NEW INDIAN PENAL CODE PART I INDIAN PENAL CODE PART II INDIAN PENAL CODE PART III INDIAN PENAL CODE PART IV INDIAN EVIDENCE ACT PART 1 INDIAN EVIDENCE ACT PART II INDIAN EVIDE...

Easy office work Excel USEFUL FORMULA IN Tamil Details

  MOST USEFUL FORMULA IN EXCEL VLOOKUP FORMULA முதல் Row-வில் உள்ள Data-களை இரண்டாவது Row-வில் உள்ள Data.களுடன் ஒப்பிட்டு பார்க்க  VLOOKUP FORMULA  பயன்படுகிறது =VLOOKUP(B3,D:D,1,FALSE) CONCATENATE  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இணைப்பதற்கு  CONCATENATE  FORMULA பயன்படுகிறது. =CONCATENATE(B3," ",C3," ",D3) CHAR(1)  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒன்றாக இடைவெளி விட்டு இணைப்பதற்கு  CHAR(1)  FORMULA   பயன்படுகிறது. =B3&CHAR(1)&C3&CHAR(1)&D3 CHAR(10)  FORMULA இரண்டு மற்றும் மூன்று செல்களில் உள்ள பெயர்களை ஒரே செல்லில் மேலிருந்து கீழ் வரிசையில்  CHAR(10)  FORMULA  வைப்பதற்கு  =B3&CHAR(10)&C3&CHAR(10)&D3 TRIM FORMULA ஒரே செல்லில் உள்ள நிறைய இடைவெளி (space) -னை சரி செய்ய  TRIM FORMULA பயன்படுகிறது =TRIM(D3) LOWER FORMULA ஒரு செல்லில் உள்ள ஆங்கில பெரிய எழுத்தை சிறிய எழுத்தாக மாற்றுவதற்கு  LOWER FORMULA பயன்ப...

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற (06.05.2024) திங்கள் கிழமையன்று உள்ளுர் விடுமுறை. இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற (29.06.2024) சனிக்கிழமை வேலைநாளாகும். இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.